இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்ல மூன்றாண்டுக்கு தடை – சவூதி அரபியா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்வதை தடுக்க செளதி அரேபியா அந்நாட்டு மக்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படும் வகையிலும் மற்றும் தற்போது புதியவகை வைரஸ் பரப்புவதைத் தடுக்கும் முயற்சிகளின் கீழ் ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு மக்களுக்கு, சவுதி அரேபியா மூன்று ஆண்டு பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள சிலர், கடந்த 2020 மே மாதம் முதல் முறையான முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தற்போது தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செல்பவர்கள் சட்டப்பூர்வமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணம் அல்லது போக்குவரத்துக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், பயண விதிமுறைகளை மீறி தடை விதிக்கப்பட்ட சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றுவிட்டு செளதி அரேபியா திரும்பும்போது, அவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவூதி அரபியாவில் நேற்று 1,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 520,774 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,189 பேர் உயிரிழந்துள்ளனர்.  2020 ஜூன் மாதத்தில் தினசரி நோய்த்தொற்றுகள் 4,000 க்கு மேல் இருந்து வந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

31 minutes ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

1 hour ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

2 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

2 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

3 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

4 hours ago