சவுதி ஏர்லைன் விமானம் விபத்து..!
சவுதி ஏர்லைன் விமானம் அவசர தரையிறக்கத்தின் போது விபத்துக்குள்ளானதில் 53 பயணிகள் காயமுற்றனர்.
சவுதி அரேபியாவின் மதீனாவில் இருந்து 151 பேருடன் அந்த விமானம் வங்கதேசம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோளாறு ஏற்பட்டு விடவே, ஜெட்டாவில் அவசரமாக தரையிறங்கியது. ஆனால் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் வேலை செய்யாததால், விமானத்தின் முன்பகுதி தரையில் உரசி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 53 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமான நிலையத்தை அடைந்ததும் பயணிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.