தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சதீஷ். ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஹீரோவாக நாய்சேகர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “சட்டம் என் கையில்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்த அணைத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் சதிஷிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில், போஸ்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு சதீஷ் மிகவும் மிரட்டலான லுக்கில் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதீஸ் தற்போது அதிரடி ஆக்சன் ஹீரோவாக களமிறங்குகிறார்.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…