திருமணமான நாளில் மறக்க முடியாத பரிசு இதுதான்! – சதிஷ் நெகிழ்ச்சி! காரணம் இதுதான்!

- சூப்பர் ஸ்டாரின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
- சூரி ஏற்கனவே கமிட் ஆன நிலையில் தற்போது சதீஸும் முக்கிய காமெடி நடிகராக ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமா காமெடி நடிகர் சதீஷிர்க்கு இன்று திருமணம் நடைபெற்றது. சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணத்திற்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமண நாளான இன்று இவருக்கு சூப்பர் பரிசு கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ இந்த நாளுக்காக தான் நான் ஏங்கி கொண்டிருந்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா, கலாநிதி மாறன் சார் என அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மறக்கமுடியாத கிப்ட்’ என சதீஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இப்படம் ரஜினியின் 168வது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்பட பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
.@actorsathish joins the cast of #Thalaivar168 .
Congratulations @actorsathish on your wedding today and our best wishes to the newly married couple!
@rajinikanth @directorsiva pic.twitter.com/Dbnn7Oniaz— Sun Pictures (@sunpictures) December 11, 2019