சசிகுமாரின் “எம்ஜிஆர் மகன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, சத்யராஜ், சரண்யா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஆண்டனி தாஸ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைமெண்ட் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது . கடந்த ஆண்டு வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதம் 23ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
#MGRMAGAN will meet you in theatres on April 23! ????????
Get ready to enjoy a fun fest this summer 2021! ????@SasikumarDir @ponramVVS @Screensceneoffl @mirnaliniravi @thondankani @anthonyinparty @senthilkumarsmc @sidd_rao @skiran_kumar @vivekharshan pic.twitter.com/5GJcIgDQ5n
— Sony Music South (@SonyMusicSouth) February 19, 2021