இந்த மாதம் சசிகுமாரின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
நடிகர் சசிகுமார் தற்பொழுது பல்வேறு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் எஸ்.ஆர்.சரவணன் அவர்கள் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த உடன்பிறப்பே எனும் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து சசிகுமார் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து கொம்பு வச்ச சிங்கம்டா எனும் படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக ராஜவம்சம் எனும் சசிகுமார் நடித்த இந்த படம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நாளில் சசிகுமாரின் இரண்டு படங்களும் வெளியாகுமா என்பது சந்தேகம் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, இருப்பினும் நவம்பர் மாதத்தில் மட்டும் சசிகுமாரின் மூன்று படங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இது சசிகுமாரின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…