இந்த மாதம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள சசிகுமாரின் 3 படங்கள் …!

Default Image

இந்த மாதம் சசிகுமாரின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

நடிகர் சசிகுமார் தற்பொழுது பல்வேறு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் எஸ்.ஆர்.சரவணன் அவர்கள் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த உடன்பிறப்பே எனும் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து சசிகுமார் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து கொம்பு வச்ச சிங்கம்டா எனும் படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள்  இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக ராஜவம்சம் எனும் சசிகுமார் நடித்த இந்த படம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நாளில் சசிகுமாரின் இரண்டு படங்களும் வெளியாகுமா என்பது சந்தேகம் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, இருப்பினும் நவம்பர் மாதத்தில் மட்டும் சசிகுமாரின் மூன்று படங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இது சசிகுமாரின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
adhik ravichandran
dhoni Riyan Parag
Myanmar Earthquake
pm modi MK stalin
CSKvsRR