தமிழ் சினிமாவில் பல முறை ஒரு ஹீரோ நடித்த வெவ்வேறு படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இதெல்லாம் அந்த காலத்தில் நடந்தது. கடைசியாக பரத் நடித்திருந்த வெயில் மற்றும் சென்னை காதல் ஆகிய படங்கள் ரிலீசாகி இருந்தன. அதற்கடுத்து எந்த ஹீரோ படமும் ரிலீசானதாக தெரியவில்லை.
தற்போது அதே நிலைமை வரும் பொங்கல் தினத்தில் நடக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார் நடித்து இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி உள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த திரைப்படத்தினை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.
அதே போல ரஜினிமுருகன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் ரிலீசிற்கு தயராகி விட்டது. சத்யராஜ், மிருளானி ரவி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் ரிலீஸிற்கு தயராக உள்ளது.
இந்த இரு படங்களும் பொங்கல் ரேஸில் களமிறங்க தயாராக உள்ளது.இரு படங்களும் கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் இருபடங்களுமே பொங்கல் தினத்தை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இரு படங்களின் ரிலீஸ் பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…