சத்யா சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கழுகு பட இயக்குனர் சத்யா சிவா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர்மகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைபோல் சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவுடன் உடன்பிறப்பே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து சத்யா சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பிரசன்னா இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியா நடிகை ஹரிப்பிரியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில், கனகவேல் காக்க, முரண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…