வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்குள்ளாக இயக்குனர் பொன்ராம் நடிகர் சசிகுமாரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சசிகுமாருக்கு கதை கூறி அவரிடம் சம்மதம் வாங்கி உள்ளார் இயக்குனர் பொன்ராம். இப்படத்தில் முக்கிய ரோலில் ராஜ்கிரண் முதலில் நடிப்பதாக இருந்தது. தற்போது அவரிடம் கால்சீட் இல்லாத காரணத்தால், சத்யராஜ் இப்படத்தில் இணைந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…