சசிகலா தரப்பு ஜெயலலிதா குறித்த தகவல்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல்!
சசிகலா தரப்பு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா குறித்த தம்மிடம் இருக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு, ஜெயலலிதா குறித்த ஆவணங்களை ஒப்படைக்கும் படியும், அவர் மீதான புகார்களுக்கு விளக்கமளிக்கும் படியும் சம்மன் அனுப்பியிருந்தது.
இதற்கு தம் மீது அளிக்கப்பட்ட புகார் விவரங்கள், புகார்கள் அளித்தவர்கள் விவரங்களை ஒப்படைக்கும் படி சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற விசாரணை ஆணையம், சசிகலா மீது புகார் அளிக்கப்பட்ட விவரங்கள் குறித்த அனைத்தையும் சசிகலா தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தது.
மேலும் 15 நாட்களுக்குள்ளாக சசிகலாவிடம் இருக்கும் ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யும் படியும் நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே சசிகலா தரப்பில் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து. இன்றைய தினம் ஜெயலலிதா குறித்த ஆவணங்கள் அனைத்தையும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை ஆணையத்தில் வழங்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.