சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி : 5 வயது சிறுவன் சாதனை…!!!
சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் சென்னை சூளைமேடு பகுதியை சார்ந்த தவிஷ் என்ற 5 வயது சிறுவன் பங்கேற்றான்.
இந்த போட்டியில் சிறுவன் வெற்றி பற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றான்.
இந்த சிறுவன் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு சென்னை வந்தடைந்தான். சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.