சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் கொத்தவரங்காய்….!!!
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். அதற்க்கு காரணமே இயற்கை உணவு முறைகள் தான். இதனால் தான் அவர்கள் நோயின்றி நீண்ட நாள் வாழ முடிந்தது. இப்பொது நாம் கொத்தவரங்காய் நமக்கு என்னென்ன நண்மைகளை தருகிறது என்று பார்க்கலாம்.
சத்துக்கள் :
கொத்தவரங்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மலிவான விலைகளில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறிதான். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்த்து சத்துக்களையும் தரக்கூடியது. இதில் கால்சியம், பொட்டாசியம், மாக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து ஆகியவை உள்ளது.
பயன்கள் :
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொத்தவரங்காய் சாப்பிடும் போது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
- இது எலும்புகளை பலப்படுத்துகிறது பற்களின் வலிமையை அதிகப்படுத்துகிறது.
- இது இரத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, மாரடைப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
- இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- இதில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
- வாரம் இரண்டு முறை இந்த காயினை சாப்பிட்டு வந்தால் சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கிறது.
- செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.
- புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.