தளபதி விஜயின் 65 வது படத்தில் நடிகர் ராதா ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் பணியாற்றவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றவுள்ளார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திகி நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகரான ராதாரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் கடைசியாக நடிகர் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராதா ரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…