நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியான இந்திய வம்சாவளி பெண்.!

அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலை கழகத்தில் சட்டம் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சரிதா கோமதி ரெட்டி, தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் அசோக் மைக்கேல் பிண்டோவை உலக வங்கியின் குழுமத்தில் உள்ள பன்னாட்டு புராணமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியில் (ஐ.பி.ஆர்.டி) அமெரிக்காவின் பிரதிநியாக ட்ரம்ப் நியமித்திருந்தார்.
இதே போல தற்போது, புதியதாக நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சரிதா கோமதிரெட்டியை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபைக்கு அவர் அனுப்பியுள்ளார். இவர் அமெரிக்க மேல்முறையீடு நீதிமன்றத்தில் சட்ட எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.