60வது குழந்தைக்கு தந்தையான பாகிஸ்தானியர்.! 4வது திருமணம் செய்ய விருப்பம்.?
பாகிஸ்தான் நாட்டில் சர்தர்ஜன் என்பவர் 60வது முறை தந்தையாகி உள்ளார். அவருக்கு 3 மனைவிகள் உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் வசிக்கும் சர்தர்ஜன் முகமது கான் என்பவருக்கு நேற்று அறுபதாவது குழந்தை பிறந்ததாக தெரிவித்தார்.
சர்தர்ஜனுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏக விருப்பமாம். இதுவரை 3 பெண்களை திருமணம் செய்து கொண்டு 59 குழந்தைகளுக்கு தந்தையாகி தற்போது 60வது முறை தந்தையாகி உள்ளார். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ள மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய எண்ணியுள்ளாராம். சர்தர்ஜன் தனது மகனுக்கு குஷால் என பெயர் வைத்துள்ளார்.