சார்பட்டா பரம்பரை 2..?- இயக்குனர் பா.ரஞ்சித் ஓபன் டாக்.!

சார்பட்டா பரம்பரை பற்றி திரைக்கதையை உருவாக்கி வருகிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது, சார்பட்டா பரம்பரை பற்றி எழுத்தாளர்கள் பாக்கியம் சங்கர உள்ளிட்ட சிலருடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். இது, சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும் அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இது சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகமா இல்லை வெப் சீரீசா என்பதை இப்போது என்னால் உறுதியாக கூற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025