ஷூட்டிங் ஸ்பாட்டில் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிக்பாஸ் சரவணன்..!

சரவணன், இந்திய திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ‘மருத’ என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருடைய மகன் தீரஜ் கிர்த்திக்கிற்கு அக்.14ம் தேதி பிறந்த நாள் என்பதால் என்னால் அன்று வர முடியாது என்றார். இதற்காக படக்குழுவினர் படப்பிடிப்பின் போதே தீரஜ்ஜின் பிறந்த நாளை ராதிகா சரத்குமார் முன்னிலையில் கொண்டாடியுள்ளனர். பிறந்த விழாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025