தளபதி 66 இல் சரத்குமார் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு…!

Default Image

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 -வது படத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது..

இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். பூஜையுடன் இன்று காலை இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சரத்குமாரும் கலந்துகொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் சரத்குமாரும் இந்த படத்தில் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இது உறுதியாகியுள்ளது. சரத்குமார் தளபதி 66 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்