இரண்டாம் சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.சரபோஜி மன்னர் அழகிய தோற்றமும், சிறந்த வீரமும், உள்ளத்தில் நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். இவர், கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கினார். இவர், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி, தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1805 ஆம் ஆண்டு தேவநாகரி எழுத்தில் ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல வகை அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அன்பளிப்பாக அளித்தார்.மேலும், பல திருப்பணிகளையும் செய்தார்.பல அன்ன சத்திரங்களை அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது ஒரத்தநாட்டுச் சத்திரமாகும். முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை முக்தாம்பாள்புரம் என்று தற்போதும் அழைக்கின்றனர். இத்தகைய பல்வேறு பணிகளை செய்த இவர் மறைந்த தினம்(07.03.2020) வரலாற்றில் இன்று….
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…