வரலாற்றில் இன்று(07.03.2020)… பல அன்ன சத்திரங்கள் நிறுவிய சரபோஜி மறைந்த தினம் இன்று…

Default Image

இரண்டாம் சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.சரபோஜி மன்னர்  அழகிய தோற்றமும், சிறந்த வீரமும், உள்ளத்தில் நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். இவர்,  கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கினார். இவர், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி, தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் சிறந்து விளங்கினார். 1805 ஆம் ஆண்டு தேவநாகரி எழுத்தில்  ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல வகை அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அன்பளிப்பாக அளித்தார்.மேலும்,  பல திருப்பணிகளையும்  செய்தார்.பல அன்ன சத்திரங்களை  அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது ஒரத்தநாட்டுச் சத்திரமாகும். முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை முக்தாம்பாள்புரம் என்று தற்போதும் அழைக்கின்றனர். இத்தகைய பல்வேறு பணிகளை செய்த இவர் மறைந்த தினம்(07.03.2020) வரலாற்றில் இன்று….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்