நாட்டுப்புற இசைக்குழுவுடன் நடனமாடி சியான் 60 இசை பணிகளை தொடங்கிய சந்தோஷ் நாராயணன்..!!

சியான் 60 படத்திற்கான இசைப்பணிகளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நாட்டுப்புற இசைக்குழுவுடன் இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக தனது ட்வீட்டர் பாக்கத்தில் நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தியேட்டர் கிழியப்போவது உறுதி என்று கூறிவருகிறார்கள்.
Post session fun with my dearest folk band for #Chiyyan60. ????????@karthiksubbaraj pic.twitter.com/iZku4DMVHV
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021