கர்ணன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்..!!
கர்ணன் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இன்று அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
SaNa, #Dhanush and epic OSTs ???? #VadaChennai & now #Karnan
▶ https://t.co/cJOGVrSPZR#KarnanOriginalScore @thinkmusicindia
— Kaushik LM (???? #StaySafe) (@LMKMovieManiac) May 14, 2021