சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. படத்திலிருந்து அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், சர்வர் சுந்தரம் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ், வைபவி ஷிந்திலியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல முறை ரிலீஸ்க்கு தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்…
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…