குலுகுலு படத்தின் DUBBING பணியில் சந்தானம்.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டிலுடன் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம்.
விறுவிறுப்பாக நடந்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டப்பிங் பணியில் சந்தானம ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025