தில்லுக்கு துட்டு 3.! மிரட்டலான அப்டேட் கொடுத்த சந்தானம்.!

தில்லுக்கு துட்டு 3 குறித்த அப்டேட்டை நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் ராம் பாலா இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டை நடிகர் சந்தானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தில்லுக்கு துட்டு 3 குறித்து கேட்டதற்கு சந்தானம் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. என பதிலளித்துள்ளர்.
மேலும் சந்தானம் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025