மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். தற்பொழுது நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் தான் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாகட் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தியை ஏற்கமுடியாது என கூறுபவர்கள் அரசியலமைப்பை மறுக்கிறார்கள் என்பது தான் அர்த்தம்.
இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் தான் இருக்க வேண்டும். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மூத்த மொழி சமஸ்கிருதம் தான் என தெரிவித்துள்ளார். மேலும் பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் அடங்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் தங்களது மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பெருமை கொள்வது அனைவருக்குமான பிறப்புரிமை. நான் பஹாரி என்பதில் பெருமை கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…