கையில் டென்னிஸ் பேட்டுடன் பார்த்த சானிய இப்பொழுது….குழந்தையை வாரி அணைக்கும் காட்சி..!!!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. கையில் எப்பொழுதும் டென்னிஸ் பேட்டுடன் இருக்கும் சானியாவை பார்த்த நாம் தற்போழுது தன் குழுந்தையை அரவணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.
ந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டனர். மேலும் இந்தியாவின் நட்சத்திர விராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை மணந்தது கொண்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.ஆனால் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக திருமணத்துக்குப் பின்னுபும் இந்தியாவுக்காகவே விளையாடுவேன் என சானியா உறுதியளித்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 30-ம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதை உறுதி செய்யும் விதமாக குழந்தை பிறந்தவுடன் சானியாவின் கணவர் சோயப் மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அதில் நாங்கள் இதை தெரிவிக்க மிகவும் உற்சாகமாக உள்ளோம். மேலும் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மற்றும் என்னுடைய பெண்ணும் எப்போதும் போல் வலிமையுடன் ள்ளார்.எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு பதிவிட்டார்.பிறந்த அந்த குழந்தைக்கு,இஸான்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த பெயருக்கு அரபு மொழியில் குறிப்பிட்டு சொன்னால் கடவுளின் பரிசு என அர்த்தமாம். இந்த நிலையில் தன் குழந்தையை கட்டி அரவணைத்தபடி இருக்கும் சானியாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் பதிவிட்டுள்ளார்.மேலும் இது என் புது உலகம் என்று பதிவிட்டுள்ளார்.குட்டி இஸானுக்கு 2.6 லட்சத்துக்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/BqczBL5n-VG/?utm_source=ig_embed
DINASUVADU