தனக்கு பிடித்த WWE வீரரின் பெயரை தன் மகனுக்கு சூட்டி அழகு பார்த்த சாண்டி..!

தனக்கு பிடித்த WWF வீரரின் பெயரை தன் மகனுக்கு சாண்டி பெயராக வைத்துள்ளார்.
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார். சில ஆல்பம் பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார்.
இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. சாண்டி மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
இந்த நிலையில், முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் பேரை வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025