முதலிடத்தை பிடிக்க சனம் .!13-வது இடத்திற்கு போக சொல்லும் பாலாஜி.!

கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் முதலிடம் வேண்டுமென்று சனம் வாக்குவாதம் செய்ய ,13-வது இடத்திற்கு சனமை போக சொல்லி பாலாஜி கூறுகிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் .
நேற்றுடன் முடிவடைந்த இந்த டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் முதல் இடத்திற்காக ஆரி, பாலாஜி, அர்ச்சனா மற்றும் சனம் ஆகியோர் வாக்குவாதம் செய்கின்றனர்.அப்போது அர்ச்சனா தரமான கேள்விகளுடன் பஸர் அடிக்கும் வரை தான் கேள்வி கேட்டதாக கூறி தனக்கு முதல் இடம் வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார்.அதே போல் சனமும் எனக்குத்தான் முதலிடம் என்று கூறுகிறார்.அப்போது பாலாஜி சனமை 13-வது இடத்திற்கு போக சொல்ல சனம் முடியாது என்கிறார்.
தற்போது வெளியான இரண்டாவது புரோமோவின் படி ,முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், மூன்றாவது இடத்தில் பாலாஜியும், நான்காவது இடத்தில் ரம்யாவும், ஐந்தாவது இடத்தில் ரியோ, ஆறாவது இடத்தில் ஆஜித் ஆகியோர் உள்ளனர். அதே போல் கடைசி மூன்று இடத்தில் கேபி, ஷிவானி மற்றும் நிஷா ஆகியோர் உள்ளனர் .வாக்குவாத அடிப்படையில் இந்த வரிசை மாறலாம் . யார் யார் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும் .
#Day60 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/JpU5jyvkcv
— Vijay Television (@vijaytelevision) December 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025