பிக்பாஸ் சனமிற்கு விரைவில் திருமணமா.? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சனம்.!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சனம் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகையும் , பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளருமாக இருந்தவர் சனம் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல பெரிய ஆதரவு இல்லாமல் இருந்த சனம் பிக்பாஸ் வீட்டில் தனித்துவமான முறையில் விளையாடிதன் மூலமும்,அவரது நேர்மையான குணத்தாலும் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றார் . நிகழ்ச்சியின் போது இவர் தனது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருப்பதை பார்த்தோம் .

அதை கண்ட ஒரு சில ரசிகர்கள் சனமுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.ஏனெனில் நமது கலாச்சாரப்படி திருமணமானவர்கள் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பது வழக்கம்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் எனக்கு ஒரு சந்தேகம்,சனமிற்கு திருமணம் ஆகிவிட்டதா?ஏன் அவங்க நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சனம் ,இந்த கேள்வியை பலர் கேட்கிறார்கள்.எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை . உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் விரைவில் இருக்கலாம்.என் வீட்டில் திருமணமானவர்கள் மட்டும் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க வேண்டும் என்று கூறியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சனமிற்கு விரைவில் திருமணம் என்று கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்