7000 Mah பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட சாம்சங் M51 அதிரடி விலை குறைப்பு!

Default Image

ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி சாம்சங் M51 வாங்குவோருக்கு ரூ.2000 தள்ளுபடி என அமேசான் அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி M51, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், அமேசான் வலைத்தளத்தில் விற்கப்பட்டு வருகிறது. இதன் விலை, சாம்சங் M51 (6 ஜிபி + 128 ஜிபி) – ரூ.24,999 சாம்சங் M51 (8 ஜிபி + 128 ஜிபி) – ரூ.26,999 ஆகும்.

தற்பொழுது அமேசான் கிரேட் இந்தியன் சேல் தொடங்கவுள்ள நிலையில், இந்த விற்பனையின் மூலம் அதிரடி தள்ளுபடியில் நாம் வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்கலாம். அந்த வகையில் தற்பொழுது இந்த M51 ஸ்மார்ட்போன்க்கு ரூ.2000 தள்ளுபடி வழங்குகிறது, அமேசான்.

இந்த தள்ளுபடி, ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும். அதாவது, இந்த ஐசிஐசிஐ கார்ட் மூலம் வாங்கு போருக்கு ரூ.2000 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மேலும், பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து இதை வாங்குபோருக்கு அதாவது எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கும் பயனாளர்களுக்கு ரூ.10,050 தள்ளுபடி பெறுகிறார்கள். மேலும், மாதத்திற்கு ரூ.1,272 என்ற இஎம்ஐ சலுகையும் வழங்கப்படுகிறது.

 

சாம்சங் M51 அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல FHD + Super AMOLED plus Infinity O டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே, 60Hz Refreshing rate -ஐ கொண்டது. ஸ்பீக்கரை பொறுத்தளவில், சிங்கிள் ஸ்பீக்கர் வசதி உள்ளது. மேலும், டால்பி அட்மோஸ் வசதியும் உள்ளது. 7000 Mah செயல்திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

இதில் ஆண்ட்ராய்டு 10 ஓன் UI 2.1 os-ல் இயங்குகிறது. இதில் சாம்சங்கின் எஸ்சினோஸ் ப்ராசஸார் இல்லாமல், குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 730-G பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2.2 octa core ப்ராசஸார் மற்றும் LPDDR4X ரக ரேம் வசதி உள்ளது. கேமிங்கை பொறுத்தளவில், இதில் அட்ரினோ 618 GPU மற்றும் AI கேம் பூஸ்டர் வசதி உள்ளது. மேலும், 64+12+5+5 MP என மொத்தம் நான்கு ரியர் கேமரா வசதி கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, 32 MP செல்பி கேமராவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்