டெஸ்லா மின்சார காரில் கேமராக்கள் பொருத்துவதற்காக 436 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
எலோன் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுடன் 436 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்திற்கு ,சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பிலான கேமராக்களை வழங்கவுள்ளது.
மேலும்,சாம்சங்கின் கேமராக்கள் டெஸ்லாவின் 2019 நவம்பர் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தில் (சைபர்ட்ரக்கில்) பொருத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால்,ஓட்டுநர் இல்லாமால் தானாக இயங்கும் டெஸ்லா மின்சார கார்களின் (சைபர்ட்ரக்) பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளுக்கு பதிலாக எட்டு கேமராக்கள் பொருத்தப்படும்.இந்த கேமராக்கள் பார்க்கிங் உதவி அல்லது 360 டிகிரி பறவைகளின்-கண் பார்வை போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
மேலும்,இந்த மின்சார கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 610 மைல்கள் (சுமார் 980 கி.மீ) பயணிக்க முடியும் என்று நிறுவனம் சமீபத்தில் காப்புரிமை பெற்றது.இதனால்,மின்சார கார்கள் தயாரிப்பிற்காக ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…