டெஸ்லா காரில் சாம்சங் கேமரா – 436 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ..!

Default Image

டெஸ்லா மின்சார காரில் கேமராக்கள் பொருத்துவதற்காக 436 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

எலோன் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுடன் 436 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்திற்கு ,சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பிலான கேமராக்களை வழங்கவுள்ளது.

மேலும்,சாம்சங்கின் கேமராக்கள் டெஸ்லாவின் 2019 நவம்பர் மாதத்திற்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்சார வாகனத்தில் (சைபர்ட்ரக்கில்) பொருத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்,ஓட்டுநர் இல்லாமால் தானாக இயங்கும் டெஸ்லா மின்சார கார்களின் (சைபர்ட்ரக்) பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளுக்கு பதிலாக எட்டு கேமராக்கள் பொருத்தப்படும்.இந்த கேமராக்கள் பார்க்கிங் உதவி அல்லது 360 டிகிரி பறவைகளின்-கண் பார்வை போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.

மேலும்,இந்த மின்சார கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 610 மைல்கள் (சுமார் 980 கி.மீ) பயணிக்க முடியும் என்று நிறுவனம் சமீபத்தில் காப்புரிமை பெற்றது.இதனால்,மின்சார கார்கள்  தயாரிப்பிற்காக ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்