அக்.16 முதல் விற்பனைக்கு வரும் Samsung Galaxy F41.. பிளிப்கார்ட் தரும் அதிரடி ஆஃபர்!!

Default Image

நோட், S என ஹை பட்ஜேட் முதல் A, M, முதல் லோ பட்ஜேட் வரை அதிரடியான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது புதிய F சீரியஸ் மொபைலை வெளியிட்டுள்ளது.

கொரியன் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சமீபத்தில் தனது சாம்சங் M51, S20, Note 20, போன்ற மொபைல்களை வெளியிட்டது. அந்த ரக மாடல்கள் வெளியாகி, இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது தனது புதிய F சீரியஸ் ரக மொபைகளை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் மாடலாக சாம்சங் F41 மொபைலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. F சீரியஸ் என்பது, Full on என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் டூயல் 4 ஜி VoLTE, வைஃபை 802.11, புளூடூத் 5 , ஜிபிஎஸ் டைப்-சி போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன. மேலும், இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் ப்ரின்ட் மற்றும் பேஸ் லாக் வசதி உள்ளது.

சாம்சங் F41 விபரங்கள்:

டிஸ்பிலே:

சாம்சங் F41 மொபைலில் 6.4 அங்குல FHD + Super AMOLED plus Infinity U டிஸ்ப்ளே உள்ளது. இதன்மூலம் படம்பார்க்கும்போது நல்ல கலர்ஸ்-ஐ எடுத்து காட்டும். இது பிளாஸ்டிக் ஐ போல “கிளாஸ்டிக்” எனப்படும் ஒருவகையான பிளாஸ்டிக்கால் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் Aspect ratio, 19.5:9 விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இதில் கார்னரின்க் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.

கேமரா:

சாம்சங் F41-ல் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் உள்ளது. மேலும், 8 மெகாபிக்சல் 123 டிகிரி வைட் கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்ற கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 4K60 fps வரை விடியோக்கள் எடுக்கலாம். கூடுதலாக இதில், சூப்பர் ஸ்டேபிளிசேஸன் (super stabilisation), சூப்பர் ஸ்லோ மோஷன், நைட் மோட் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

செல்பி கேமராவை பொறுத்தளவில், 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இதில் LED Flash, AI கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதிலும் 4K60 fps வரை விடியோக்கள் எடுக்கலாம்.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், 6000 Mah செயல்திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் ரிவர்ஸ் சார்ஜிங்கும் செய்யலாம். அதாவது, இந்த மொபைலை வைத்து வேரோரு மொபைலுக்கு சார்ஜ் செய்யலாம் (பவர் பேங்க் போல).

OS மற்றும் பெர்பாமன்ஸ்:

சாம்சங் F41, ஆண்ட்ராய்டு 10 ஓன் UI 2.1 os-ல் இயங்குகிறது. இதில் சாம்சங்கின் எஸ்சினோஸ் 9611 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது octa core ப்ராசஸார். மேலும் இதில் LPDDR4X ரக ரேம் வசதி உள்ளது.

சவுண்ட்:

ஸ்பீக்கரை பொறுத்தளவில், இது சிங்கிள் ஸ்பீக்கர் செட்டப்பை கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது (for headsets). இந்த சாம்சங் F14-ல் டால்பி அட்மோஸ் மற்றும் Super AMOLED plus டிஸ்ப்ளே இருக்கும் காரணத்தினால், ஹெட்போன் உபயோகித்து படம்பார்க்கும் போது திரையரங்கில் பார்ப்பது போல இருக்கும்.

ரேம் மற்றும் விலை:

சாம்சங் F14: 6 ஜிபி + 64 ஜிபி – ரூ.16,999

சாம்சங் F14: 6 ஜிபி + 128 ஜிபி – ரூ.17,999

இந்த சாம்சங் F14, வரும் இம்மாதம் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், தற்பொழுது பிளிப்கார்டில் பிக் பில்லியன் சேல் வரவுள்ள நிலையில், அந்த நேரத்தில் இந்த மொபைலை 15,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy