சபரிமலையில் இந்நாளில் மண்டல பூஜை..!தரிசிக்க ரெடியாகும் பக்தர்கள்
- சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை இந்நாளில் நடைபெறுகிறது.
- தங்க அங்கி புறப்பாடும் நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தொடச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜை தான் மண்டலபூஜை இந்நாளில் மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜ 1973ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.450 பவுன் எடை கொண்ட இந்த கவசம் மண்டலப்பூஜைக்கு முந்தைய நாளிலும் மண்டல பூஜை நாளிலும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்.
அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையானது வருகின்ற டிச.27ந் தேதி நடைபெறுகிறது.இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனியாக டிசம்பர் 23 தேதி நடைபெற உள்ளது.மண்டலபூஜையை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.