28 நாட்கள் பக்தனுக்காக பச்சைபட்டணி விரதத்தை தொடங்கினாள் அன்னை..!

சமயபுரம் மாரியம்மன் என்றலே தனிச்சிறப்பு தான் அதிலும் அன்னையின் கருணை அளவற்றது.இக்கோவிலில் தான் அன்னை அஷ்ட புஜங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னையின் இந்த திருக்காட்சி வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத ஒரு அரிய திருக்காட்சியாகும்.மாரியம்மன் திரு வடிவங்களில் சமயபுரம் தான் ஆதி பீடம் ஆகவே தான் அன்னை மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருஉருவமாக காட்சியாக அருள்பாலிக்கிறார்.
மும்மூர்த்திகளை காக்கவும், அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய்கள், தீவினைகள் அவர்களை அணுகாமல் இருக்கவும்,மேலும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை கிட்டத்தட்ட 28 நாட்கள் அம்மனே பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.பக்தனுக்காக விரதம் இருக்கும் அந்த நாட்களில் அன்னைக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது.
அதற்கு பதிலாக அன்னை துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் ஆகியவைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இறைவனை நோக்கி பக்தன் தான் விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபாடுகளை மேற்கொள்வார்கள் ஆனால் இங்கு அன்னையே தன் பக்தனுக்காக பச்சை பட்டணி விரதத்தை மேற்கொள்வது தாயின் அளவில்லாத கருணையை தான் காண்பிக்கிறது..ஓம் சக்தி ஆதிபாரசக்தி…
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025