முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெயிட்டு விழாவில் அதுல்யா ரவியை சாந்தனு புகழ்ந்து பேசியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று முருங்கைக்காய் சிப்ஸ். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், நடிகை அதுல்யா ரவி, சாந்தனு, பாக்கியராஜ், யோகி பாபு, தரண்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அதில் பேசிய சாந்தனு ” எனக்கு சமந்தா பல வருடங்களுக்கு முன்பு நல்ல தோழி..அவர் நடிக்க வந்த புதுசுல.. அப்புறம் அப்படியே பெரிய கதாநாயகியாகிட்டாங்க.. அப்புறம் நடுவுல கொஞ்சம் கேப் ஆய்டிச்சி.. ஆனால் சமந்தா நடிக்க வந்த போது நான் சொன்ன நீங்க அழகா இருக்கீங்க..முக்கியமான தமிழ் பேசுறீங்க… கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று கூறினேன்… அதேதான் நான் அதுல்யாவிடம் பார்க்கிறேன்.. அழகா இருக்கீங்க தமிழ் பேசுறீங்க… வாழ்த்துக்கள் அதுல்யா” என தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…