யோகா செய்யும் சமந்தா.! சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் புகைப்படம்.!

சமந்தா யோகா செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சமந்தா சமையல், கார்டனிங், தனது வீட்டு செல்ல நாயுடன் இணைந்துள்ள புகைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சமந்தா உட்கார்ந்த படி கண்ணை மூடிக் கொண்டு யோகா செய்யும் போது, அவருக்கு அருகே அவரது வீட்டு செல்ல நாயக்குட்டியும் இணைந்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தா ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025