வில்லி வேடத்தில் நடித்துள்ள சமந்தா.! அவரே கூறிய தகவல்.!
நடிகை சமந்தா தற்போது வெப் சீரிஸில் வில்லியாக நடித்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது ஊரடங்கு பலர் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில் சமந்தாவும் வெப் சீரிஸ் ஒன்றில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தனக்கு வில்லி வேடங்களில் நடிப்பது தான் ஆசை என்றும், அதனை வெப் சீரிஸ் நிறைவேற்றியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் நாகார்ஜுனா வீட்டின் மருமகள் என்பதால் குடும்பத்தின் பெயர் கெட்டு போகாத வகையில் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும், சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது தனது ஆசை என்றும், ஆனால் என்னால் முடியுமா என்ற பயம் தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.