உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உப்பு என்பது சமையலுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. கடலில் விளையக்கூடிய உப்பு மலிவாக கிடைத்தாலும், தங்கத்திற்கு ஒப்பான அளவு மதிப்பு கொண்டது. இந்த உப்பை சமையலுக்கு மட்டும் தான் உபயோகித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நமது உடலுக்கு அழகு சேர்க்கவும் இது உதவுகிறது.
இந்த உப்பு நமது சருமத்தின் இழந்த பிரகாசத்தை மீட்டுத் தருவதில் பெரிதும் உதவுகிறது. இதில் சோடியம், மெக்னிசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இது நாம் உபயோகிக்கும் விதத்தைப் பொறுத்து நமது சருமத்திற்கு அழகு சேர்க்கும். மேலும், நம் சருமத்தை மென்மையாக்கவும் இது உதவுகிறது. உப்பை எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உப்பில் லேசாக தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட் போல செய்து, கைகளால் நமது கை, கால் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தூசு, மண் மற்றும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. மேலும் வறண்ட சருமத்தை பளபளப்பாகவும் மாற்றுகிறது.
கால்களை சுத்தம் செய்வதற்கு எப்பொழுதும் லேசான வெது வெதுப்பான தண்ணீரில் உப்பைக் கலந்து 20 நிமிடம் காலை நன்கு ஊற வைத்து விட்டு ஒரு துணியால் துடைத்து எடுத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகள் மறைவது மட்டுமல்லாமல் கால்கள் வெண்மையாகவும் மென்மையாகவும் காணப்படும்.
நமது தோல் பிரச்சினைகள் மற்றும் வயிற்றில் உள்ள நச்சுக் கிருமிகளை போக்குவதற்கு இந்த உப்பு பெரிதும் பயன்படுகிறது. தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர நமது வயிறு மற்றும் குடல் சுத்தம் செய்வதுடன் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கவும் உதவுகிறது.
முகத்திலுள்ள அதிகப்படியான பருக்களை நீங்குவதற்கு உப்பு நிச்சயம் பயன்படும். இதற்கு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவி உலர விட்டு விட வேண்டும். அதன் பின் நல்ல தண்ணீரில் கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது நமது முகத்தில் காணப்படக்கூடிய முகப் பருக்கள் விரைவில் நீங்கி முகம் அழகு பெறும்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…