உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
மேலும் உணவு இல்லாமல் கஷ்டப்படும் பலர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நிவாரண பொருட்களை அனுப்பி உதவியுள்ளார்.
ஆம், உதவி எதுவும் கிடைக்காமல் தவிக்கும் உள் கிராமங்களில் உள்ள மக்களுக்கு சாக்கு சாக்காய் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளார். அந்த கிராமங்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமும் பொருட்களை அனுப்பியுள்ளார்.
இந்த பொருட்கள் அனைத்தையும் வண்டிகளில் ஏற்ற சல்மான்கானுடன் பல பிரபலங்கள் உதவி செய்துள்ளனர். ஆம் பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் உள்ளிட்ட பலர் உதவியது அந்த வீடியோவில் காணலாம். தற்போது இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…