செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த சல்மான் கான்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த சல்மான் கான்.
- அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்.
நடிகர் சல்மான் கான் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். இவரது படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில் இவர் எங்கு சென்றாலும், அவரது ரசிகர்கள் அவருடன் இணைந்து செல்பி எடுக்க வேண்டும் என விரும்புவது உண்டு.
இந்நிலையில், நடிகர் சல்மான்கான் கோவாவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றுள்ளார். அதனால் கோபமடைந்த சல்மான் கான், அந்த ரசிகரின் செல்போனை பறித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் என்று தெரிய வந்தது. ஆனால், சம்பவம் குறித்து புகார் தரப்படவில்லை என்று விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் எகோஸ்கர் தெரிவித்துள்ளார்.