உப்புநீரால் வாய் கொப்பளிபதால் கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு உப்புநீரால் வாய் கொப்பளிப்பதால் பொதுவாக சளி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் குறைவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் அஷர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பேராசிரியர் அஜீஸ் ஷேக் கூறுகையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சந்தேகத்திற்குரியவர்களை கொண்டு சோதனை செய்து கொரோனா அறிகுறிகள் குறையுமா..? என ஆய்வு செய்ய உள்ளோம்.
இந்த சோதனை பாதிப்பு மற்றும் பரவலைக் குறைக்கும் என நம்புகிறோம். கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மோசமான நோயாளிகள், ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மற்றும் எபோலா எதிர்ப்பு மருந்து ரெமெடிசிவிர் ஆகிய இரண்டு ஆன்டிவைரல்கள் மருந்து அனுமதிக்கப்படுகிறது.
இது பொதுவாக இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு ELVIS( Edinburgh and Lothians Viral Intervention Study) என அழைக்கப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், உப்புநீரை கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் குணமடைந்தது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ELVIS சோதனையின் முடிவுகள் படி குறைவான, கடுமையான இருமல் மற்றும் குறைவான சளி இருப்பவர்களுக்கு சராசரியாக இரண்டு நாட்களில் குணமடைவது தெரியவந்துள்ளது என கூறினார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…