தலிபான்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடிய முதல் ஆப்கான் கவர்னர் சலீமா திடீர் கைது…!

Published by
Edison

தாலிபனுக்கு எதிராக போராடிய முதல் ஆப்கான் பெண் கவர்னர் சலீமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிராக தலிபான்களுக்கும், அரசு படைகளுக்கு இடையே கடும் போர் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வெடிப்புகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போர் முடிவு;பொது மன்னிப்பு:

கடைசியாக ஆப்கான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாகவும்,அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்து பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டியிருந்தனர்.

பெண்களுக்கு சம உரிமை:

மேலும்,நாட்டில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதாகவும்,ஹிஜாப் அணிவது கட்டாயம்தான். ஆனால் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும், பெண் கல்வியும் ஊக்குவிக்கப்படும் என்று தலிபான் படைகள் தெரிவித்து இருந்தன.

ஆட்சி மாற்றம்:

அதுமட்டுமல்லாமல்,தலிபான்கள் முதல் 3 நாள் ஆட்சியிலேயே மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள். முதலில் தங்கள் ஆட்சியில் பெண் அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும்.அதோடு பெரிய மாற்றமாக பெண் செய்தியாளர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். பெண் செய்தியாளர்கள் பொது இடங்களில் செய்தி சேகரித்தனர். தலிபான்களிடமே மைக்கை நீட்டி பேட்டிகளை எடுத்தனர். எனினும், தலிபான்களின் பழைய ஆட்சி காரணமாக இன்னும் ஒரு அச்சம் அங்கு நிலவும் வருகிறது.

கவர்னர் கைது:

இந்நிலையில்,கவர்னர் சலீமா மசாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் கவர்னரான சலீமா திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தலிபான்களின் ஆட்சி முறை மீதான கேள்வியை எழுப்பி உள்ளது.ஆப்கானிஸ்தானின் முதல் பெண் கவர்னர்களில் ஒருவரான சலீமா மசாரி, தலிபான்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்.பால்க், சாகர்கிண்ட் பகுதியின் கவனராக இருந்தார்.

நான் வெளியேற மாட்டேன்:

ஆப்கானிஸ்தானில் மொத்த நாடும் தலிபான் வசம் சென்ற போதும். சஹார் கிண்ட்டை அப்படியே வைத்திருக்க,கவர்னர் சலிமா தலிபான்களுக்கு எதிராக ஈடுபட்டு அப்பகுதியை பாதுகாத்தார்.மேலும்,”இது என்னுடைய நாடு, நான் எங்கும் செல்ல மாட்டேன்,யார் வெளியேறினாலும் நான் வெளியேற மாட்டேன்”, என்றும் உறுதியாக அறிவித்தார்.

துப்பாக்கி ஏந்தி போராட்டம்:

அதோடு ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு சிறு சிறு போராளி குழுக்களோடு சேர்ந்து தலிபான்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தினார். ஆப்கானிஸ்தானின் பயிற்சி பெற்ற ராணுவமே பல இடங்களில் தலிபான்களுக்கு எதிராக போரிட மறுத்து தலிபான்களிடம் சரண் அடைந்தது. ஆனால் சலீமா தலிபான்களிடம் சரண் அடையவில்லை.

ஆனால்,அதன் பின்னர் நீண்ட  மோதல் மற்றும் போராட்டத்திற்கு இடையில்தான் சலீமாவின் பால்க் மாகாணம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது.இவ்வாறு,மொத்தமாக ஆட்சி கைப்பற்றப்பட்ட நிலையில்,தலிபான்கள் நேற்று அவரை சுற்றி வளைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,அவரது தற்போதைய நிலை குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

யார் இவர்:

சலீமா மசாரி ஈரானில் பிறந்தார். சோவியத் போரின் போது ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடியவர்களில் அவரது குடும்பமும் இருந்தது. அவர் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் பின்னர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்.2018 ஆம் ஆண்டில், அவர் சஹார் கிண்ட் பகுதிக்கான ஆளுநராகப் பொறுப்பேற்று பதவி வகித்து வந்தார்.

போரின்மூலம் நாட்டின் பல நகரங்களையும் கைப்பற்றியதால் தலிபான்களுக்கு எதிராக போராட தனது சொந்த போராளிகளை நியமித்து பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

9 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

10 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

10 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

11 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

11 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago