சளி தொல்லை போக்கும் திப்பிலி…..!!!
சளி தொல்லை என்பது நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நம்மை தொடர்ந்து வரும் நோய் ஆகும். இதிலிருந்து விடுதலை பெற முடியாமல் தவிப்போர் அதிகமானோர். இதற்காக எத்தனைய மருத்துவம் செய்தும் அதிலிருந்து விடுதலை பெற முடியாதோர் உள்ளனர். பிறகு அது நமது உடலுக்குள் தேங்க ஆரம்பித்து பிறகு பெரிய வியாதிகளை கொண்டு வர துவங்குகிறது.
தொடர்ந்து சளித்தொல்லை இருப்போர்க்கு, அது நாளடைவில் அது சுவாசிக்க கோளாறாக மாறி விடும். எனவே திப்பிலி பொடியை வெந்நீரிலோ அல்லது தேனிலோ கலந்து சாப்பிட்டு வர, சுவாச பிரச்சனை மற்றும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தர விடுதலை பெறலாம்.