சமுத்திரக்கனியை கலாய்ப்பதை விட்டு விட்டு இதை செய்யுங்கள்!
உலகம் முழுவதுமே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல், தங்களது வேலைகளை வழக்கம் போல பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், தற்பொழுது நடிகரும் இயக்குநருமாகிய சமுத்திரகனி அவர்களை அழைத்து மீம்ஸ் போட்டு நக்கல் செய்து சிலர் சமூக வலைதளங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய இயக்குனர் ரத்தினகுமார் இதுபோன்ற சமுத்திரகனியை கலாய் மீம்ஸ் போடுவதை விட்டுவிட்டு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுங்கள் என கூறியுள்ளார்.