பஹிரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சாக்ஷி அகர்வால்..!!
பஹிரா படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை சாக்ஷி அகர்வால் முடித்துளளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படதிற்கு இசையமைப்பாளர் கணேஷ் சேகர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான டீசர் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகையாக நடித்த சாக்ஷி அகர்வால் படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துள்ளார். இதனால் விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.