பிரபல தமிழ் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் அவர்களுக்கு நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வா குவாட்டர் கட்டிங் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் காளி வெங்கட். இதனை அடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இறுதிசுற்று எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வரக்கூடிய சிலர் தற்போது தமிழ் திரையுலகில் எல்லாம் ஹீரோவாகவும் மாறி விடுகிறார்கள். அப்படி ஹீரோவானவர்தான் நமது காளி வெங்கட் தற்பொழுது இவர் யாருக்கும் அதிகம் தெரியாமல் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலமாக பிரபலமாகிய சாய்பல்லவி தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலுமே தற்பொழுது கலக்கி வருகிறார். இந்நிலையில் காளி வெங்கட்டுக்கு இவர் தற்பொழுது ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.