TakiTaki பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷா .!டேன்ஸ்ல உங்கள மிஞ்ச ஆளே இல்ல.!
உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷாவின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவுகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்தும், நடனமாடும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். வழக்கமாக சமையல் செய்யும் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாயிஷா தற்போது TakiTaki பாடலுக்கு உடலை வளைத்து வளைத்து அசத்தலான நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது வளைவு நெளிவுகளை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். நடனத்தில் சாயிஷாவை அடிச்சுக்க ஆளே இல்லை என்பதை திரும்பவும் நிரூபித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.